Sunday, July 19, 2020

பைரவர் (1)


     
         பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது. 

      சந்தன அபிஷேகம் மிகவும் உகந்தது. அதனுடன் வாசனை திரவியங்களான புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ. பச்சை கற்பூரம் ஆகியவையும் அபிசேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. 
தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை ஆகியவை பைரவருக்கு உகந்ததாக கூறப்படுகிறது. வாசனைப் பூக்களில் மல்லிகைப்பூவை தவிர்த்து மற்ற அனைத்து பூக்களும் பைரவருக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.

          பீட்ரூட்டை வெட்டி வேகவைத்து அந்த தண்ணீரில் கலந்த சாதம், தேனில் ஊறவைத்த உளுந்து வடை மற்றும் வடையை மாலையாக சாற்றுதல். எலுமிச்சை சாதம் படைத்தல் போன்றவைகள் ஸ்ரீபைரவருக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள் ஆகும். சுண்டல், வடை, பாயசம், சர்க்கரைப் பொங்கல், நிவேதனம் செய்ய வேண்டும். சிகப்பு அரளி மலர்களால் அர்ச்சனை  செய்ய வேண்டும்.

          பைரவர் பரணியில் அவதரித்தவர். சித்திரை , ஐப்பசி ஆகிய மாதங்களில் வரக்கூடிய பரணி நட்சத்திரம் கால பைரவருக்கு விசேஷ நாட்கள். எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். ஆனால் செவ்வாய்க் கிழமைகளில் அஷ்டமி இணைந்து வந்தால் அதைவிடச் சிறப்பான நாள் ஏதுமில்லை.

           குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும். செவ்வாய்க்கிழமை வருகின்ற அஷ்டமியானது சிறப்புவாய்ந்ததாகும். பரணி நட்சத்திரக்காரர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியமும், பலனும் அதிகம் கிடைக்கும். 

            கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்மாஷ்டமி ஆகும். இந்த தினத்தில் அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் வழிபாடு நடத்தப்படுகிறது. ஒருவரின் உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும்போது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது. 

              தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீம் ஏற்றி வழிபாட்டால் காலத்தினால் தீர்க்கமுடியாது தொல்லைகள் நீங்கி, நல்லவை வந்து சேரும்.  பஞ்ச தீபம் என்பது விளக்கெண்ணெய், இழுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் சேர்த்த எண்ணெய் ஆகும். இவற்றை தனித்தனியாக அகல்விளக்கில் ஏற்ற வேண்டும். பைரவருக்கு பஞ்ச தீபம் ஏற்றி வழிபடுவதால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். 

         12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும் அவருள் அடக்கம் என்பதால் இவரை வணங்கினால் உயர்வான வாழ்வினைப் பெறலாம். 21 அஷ்டமி நாளில் பைரவரை வணங்கிய எவரும் வாழ்வில் துன்பத்தை அடைவதே இல்லை என்பது ஐதீகம். 

அறுபத்து நான்கு பைரவர்கள்

      பைரவ மூர்த்தி அறுபத்து நான்கு பணிகளைச் செய்யும் பொருட்டு அறுபத்து நான்கு பைரவராக தோற்றமளிக்கின்றார்

  1. நீலகண்ட பைரவர்
  2. விசாலாக்ஷ பைரவர்
  3. மார்த்தாண்ட பைரவர்
  4. முண்டனப்பிரபு பைரவர்
  5. ஸ்வஸ்சந்த பைரவர்
  6. அதிசந்துஷ்ட பைரவர்
  7. கேர பைரவர்
  8. ஸம்ஹார பைரவர்
  9. விஸ்வரூப பைரவர்
  10. நானாரூப பைரவர்
  11. பரம பைரவர்
  12. தண்டகர்ண பைரவர்
  13. ஸ்தாபாத்ர பைரவர்
  14. சீரீட பைரவர்
  15. உன்மத்த பைரவர்
  16. மேகநாத பைரவர்
  17. மனோவேக பைரவர்
  18. க்ஷத்ர பாலக பைரவர்
  19. விருபாக்ஷ பைரவர்
  20. கராள பைரவர்
  21. நிர்பய பைரவர்
  22. ஆகர்ஷண பைரவர்
  23. ப்ரேக்ஷத பைரவர்
  24. லோகபால பைரவர்
  25. கதாதர பைரவர்
  26. வஞ்ரஹஸ்த பைரவர்
  27. மகாகால பைரவர்
  28. பிரகண்ட பைரவர்
  29. ப்ரளய பைரவர்
  30. அந்தக பைரவர்
  31. பூமிகர்ப்ப பைரவர்
  32. பீஷ்ண பைரவர்
  33. ஸம்ஹார பைரவர்
  34. குலபால பைரவர்
  35. ருண்டமாலா பைரவர்
  36. ரத்தாங்க பைரவர்
  37. பிங்களேஷ்ண பைரவர்
  38. அப்ரரூப பைரவர்
  39. தாரபாலன பைரவர்
  40. ப்ரஜா பாலன பைரவர்
  41. குல பைரவர்
  42. மந்திர நாயக பைரவர்
  43. ருத்ர பைரவர்
  44. பிதாமஹ பைரவர்
  45. விஷ்ணு பைரவர்
  46. வடுகநாத பைரவர்
  47. கபால பைரவர்
  48. பூதவேதாள பைரவர்
  49. த்ரிநேத்ர பைரவர்
  50. திரிபுராந்தக பைரவர்
  51. வரத பைரவர்
  52. பர்வத வாகன பைரவர்
  53. சசிவாகன பைரவர்
  54. கபால பூஷண பைரவர்
  55. ஸர்வவேத பைரவர்
  56. ஈசான பைரவர்
  57. ஈசான பைரவர் முண்டாக்தாரிணி
  58. ஸர்வபூத பைரவர்
  59. கோரநாத பைரவர்
  60. பயங்க பைரவர்
  61. புத்திமுக்தி பயப்த பைரவர்
  62. காலாக்னி பைரவர்
  63. மகாரௌத்ர பைரவர்
  64. தக்ஷிணா பிஸ்திதி பைரவர்



No comments:

Post a Comment