Sunday, July 19, 2020

பைரவர் (2)

      
         ஒரு காலத்தில் சிவனுக்கு ஐந்து தலைகள் இருந்தன. அதேபோன்று பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் உண்டு. இதனால் சிவனை விட தானே சிறந்தவர் என்ற எண்ணம் பிரம்மாவுக்கு ஏற்பட்டது. உடனே அவர் தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும் தன்னையே வணங்க வேண்டும் என ஆணவத்துடன் கூறினார்.

        இதனால் மனம் வருந்திய தேவர்கள் சிவனை தரிசித்து முறையிட்டனர். பிரம்மனின் ஆணவத்தை அடக்க பரமேஸ்வரன் தனது உடம்பில் இருந்து பைரவரை தோற்றுவித்தார். பைரவர், பிரம்மனின் ஒரு தலையை நகத்தினால் கிள்ளி எடுத்து தன் கைகளில் ஏந்தினார். இதனால் பைரவருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அதைப்போக்க கபால ஓட்டையும், பிரம்மாவின் தலையையும் கையில் ஏந்தியபடி உலகம் முழுவதும் பிச்சை எடுத்த வண்ணம் சுற்றி சென்றார். காசியில் அவர் நுழைந்து அன்னபூரணி கையால் உணவு வாங்கி உண்டதும் அவர் கையில் இருந்த கபாலம் உடைந்தது. அன்று முதல் அங்கேயே இருந்து காசியை பாதுகாக்கும் காவலராக அருள்புரிந்து வருகிறார்.
            
           ஆதிசக்தி பிரம்மாவின் மானசீக குமாரனான பிரஜாபதி தட்சன் மகளாக தோன்றினார். அவர் தாட்சாயினி என்றும் சதி தேவி என்றும் அறியப்பட்டார். பருவ வயதில் சிவபெருமானின் மீது காதல் கொண்டு, தட்சனின் விருப்பமின்றி திருமணம் செய்து கொள்கிறார். ஆணவம் கொண்டிருந்த பிரம்ம தேவரின் தலையை கொய்து பூசையின்றி போக சாபம் அளித்தமையினால் சிவபெருமான் மீது பிரம்ம குமாரனான தட்சன் கோபம் கொண்டிருந்தார். அதனால் சிவபெருமான் தாட்சாயினிக்கு அழைப்பு அனுப்பாமல் யாகமொன்றை தொடங்குகிறார். அந்த யாகத்தீயில் சதிதேவி விழுந்து இறக்கிறார்.

           சிவபெருமான் சதிதேவியாரின் பூத உடலோடு அலைவதைக் கண்ட திருமால், சிவபெருமானை அந்த மாயையிலிருந்து அகற்றுவதற்காக சக்ராயுதத்தினால் திருமால் அவ்வுடலை தகர்த்தார். சதி தேவியாரின் உடல்கள் பல்வேறு பாகங்களாக பூமியில் சிதறுண்டது. அவ்வாறு சிதருண்ட சதிதேவியின் உடல் பாகங்களை சிவபெருமான் சக்தி பீடமாக மாற்றினார். தாராகாசுரன் போன்ற அரக்கர்களிடமிருந்து சக்தி பீடங்களையும், அங்குவரும் பக்தர்களைக் காக்கவும் ஒவ்வொரு சக்தி பீடத்திற்கும் ஒரு பைரவரை காவல் தெய்வமாக நியமனம் செய்தார்.

           அந்தகாசுரன் எனும் அசுரன் சிவபெருமானிடம் பெற்ற வரத்தால் ஆணவம் கொண்டு, தேவ முனிகளை வதைத்தான். தேவர்களைப் பெண் வேடமிட்டு சாமரம் வீசும் ஏவலைச் செய்யும்படி பணித்தான். அந்தகாசுரன் சிவனிடமிருந்து இருள் என்ற பெரும் சக்தியைப் பெற்றமையால், உலகை இருள்மயமாக்கி ஆட்சி செய்தான். தேவர்களும், முனிவர்களும் அவனை அழிக்க சிவனிடம் வேண்டினார்கள். 

            தாருகாபுரத்தை எரித்த காலாக்னியை பைரவ மூர்த்தியாக சிவன் மாற்றினார். எட்டு திசைகளிலும் இருந்த இருளை நீக்க எட்டு பைரவர்கள் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.  

        பூசணிக்காயை பறித்து அவனுக்கு உணவாக கொடுத்தார். அப்போது அவன், பைரவரிடம், ‘எந்த பூஜை, நற்செயல்கள் நடந்தாலும் எனக்கும் மரியாதை செய்யப்படவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டான். அதன்படியே இன்றும் விழாக்களின் போது அந்தகாசுரனை திருப்தி செய்ய பூசணிக்காய் உடைக்கப்படுகிறது.

           அந்தகாசுரனை அழித்தபோது பெருகிய ரத்தத்தை பருக பைரவர் ஒரு பூதத்தை தோற்றுவித்தார். அதனை பருகிய பூதம், ‘தனக்கும் உலகில் மரியாதை வேண்டும்’ என கேட்க பைரவரும் அவ்வாறே அருளினார். அப்பூதமே ‘வாஸ்துபுருஷன்’ ஆவார்.


அஷ்ட(எட்டு) பைரவர்கள்


             திசைக்கொன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சில கோவில்களில் பைரவிகளுடன் இணைந்து தம்பதி சகிதமாகவும் இந்த பைரவர்கள் காட்சிதருகிறார்கள்.


அசிதாங்க பைரவர்


அசிதாங்க பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் ஆவார். இப்பைரவர் காசி மாநகரில் விருத்தகாலர் கோவிலில் அருள்செய்கிறார். அன்ன பறவையினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் குருவின் கிரக தோசத்திற்காக அசிதாங்க பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான பிராம்ஹி விளங்குகிறாள்.

ருரு பைரவர்


ருரு பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். ரிசபத்தினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சுக்கிரனின் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான மகேஸ்வரி விளங்குகிறாள்


கால பைரவர்

சண்ட பைரவர்


சண்ட பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் மூன்றாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் துர்க்கை கோவிலில் அருள்செய்கிறார். மயிலை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் செவ்வாய் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான கௌமாரி விளங்குகிறாள்.

குரோதன பைரவர்


குரோத பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். கருடனை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சனி கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வைஷ்ணவி விளங்குகிறாள்.

உன்மத்த பைரவர்


உன்மத்த பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஐந்தாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பீம சண்டி கோவிலில் அருள்செய்கிறார். குதிரையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் புதன் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வராகி விளங்குகிறாள்.

கபால பைரவர்


கபால பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஆறாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் லாட் பசார் கோவிலில் அருள்செய்கிறார். யானையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சந்திர கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான இந்திராணி விளங்குகிறாள்.

பீக்ஷன பைரவர்


பீக்ஷன பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஏழாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பூத பைரவ கோவிலில் அருள்செய்கிறார். சிங்கத்தை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் கேது கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சாமுண்டி விளங்குகிறாள்.

சம்ஹார பைரவர்


சம்ஹார பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் எட்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் த்ரிலோசன சங்கம் கோவிலில் அருள்செய்கிறார். நாயை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் ராகு கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சண்டிகை விளங்குகிறாள்.

            காசி மாநகரில் திசைக்கொன்றென எட்டு திசைகளிலும் பைரவர் கோவில் அமைந்துள்ளது. 


  1. அசிதாங்க பைரவர் - விருத்தகாலர் கோயில், 
  2. குரோத பைரவர் - காமாட்சி ஆலயம், 
  3. உன்மத்த பைரவர் - பீம சண்டி கோயில்,
  4. ருரு பைரவர் - அனுமன் காட்டில், 
  5. கபால பைரவர் - லாட் பஜாரில், 
  6. சண்ட பைரவர் - துர்க்கை கோயிலில், 
  7. பீஷண பைரவர் - பூத பைரவத்தில், 
  8. சம்ஹார பைரவர் - த்ரிலோசன சங்கம்.


No comments:

Post a Comment