புதனுக்கும் புத்திக்கும் தொடர்பு உள்ளது. அவர் 'வித்யாகாரகன்' என அழைக்கப்படுகிறார். மனத்தை ஆள்பவன் சந்திரன். அந்த சந்திரனின் புத்திரன்தான் புதன். எனவேதான் மனத்தின் எண்ண ஓட்டத்துக்கும் அறிவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஜோதிட சாஸ்திரப்படி புதன் திசை, சந்திர திசை நடப்பவர்கள், 4, 9ஆம் அதிபதிகளின் திசை நடப்பவர்கள் புதன்கிழமையன்றும், திருவோண நட்சத்திரத்திலும் ஹயக்ரீவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து ஏலக்காய் மாலை சாற்றி வழிபட ஞானமும் அறிவும் மேம்படும்,ஞாபக சக்தி அதிகரிக்கும்.
“ஹயம்” என்ற வார்த்தை “ஹஸ்வம்” என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து உருவானது. ஹஸ்வம் அல்லது ஹயம் என்றால் “குதிரையை” குறிக்கும் சொல்லாகும். விலங்குகளில் குதிரை வலிமை மிகுந்த வேகமாக, ஓடக்கூடிய, அதே நேரத்தில் அறிவுக்கூர்மை மிக்க ஒரு விலங்காகும். ஒரு மனிதனின் இயல்பையும், அவனின் குணத்தையும் புரிந்து கொள்ளும் திறன் குதிரைக்கு உண்டு. அதே நேரத்தில் மனிதர்களுக்கு பயணத்திற்கும், அவனது சுமைகளை சுமக்கவும் ஆதி காலத்திலிருந்து பயன்பட்டிருக்கிறது.
ஔஷதகிரி எனும் மலைக்கு மேல், ஸ்ரீநரசிம்மர் சந்நிதிக்கு எதிரே இருந்த அரச மரத்தடியில், கருட மந்திரம் ஜபித்தபடி தியானத்தில் இருந்தார் மகான் ஒருவர்.
கருட மந்திரம் தன் சக்தியை வெளிக்காட்டியது. பெரிய திருவடியாம் ஸ்ரீகருடாழ்வாரின் தரிசனம் மகானுக்குக் கிடைத்தது. அப்போது, ஸ்ரீகருடாழ்வார் அவருக்கு ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்ததுடன், ஹயக்ரீவ விக்கிரகம் ஒன்றையும் தந்து மறைந்தார்.
கருட பகவான் உபதேசித்த ஹயக்ரீவ மந்திரம் மகானின் உள்ளத்தில் பதிந்தது. அந்த மந்திரத்தை உச்சரித்து, ஸ்ரீஹயக்ரீவரை தியானித்தார். வழிபட்டார். ஸ்ரீஹயக்ரீவரின் திவ்விய தரிசனத்தைப் பெறும் பாக்கியம் கிடைக்கப் பெற்றார் அந்த மகான். அவரைஅனுக்கிரஹித்தார் ஸ்ரீஹயக்ரீவர். இப்படியொரு பாக்கியத்தைப் பெற்ற அந்த மகான்... ஸ்ரீதேசிகன்.
![]() |
தனக்குத் திருவருள் கிடைத்த திருவஹீந்திரபுரத்திலேயே நெடுங்காலம் இருந்தார். (ஹயக்ரீவ ஸ்தோத்திரம், கருட பஞ்சாஷத், தேவ நாயக பஞ்சாஷசத், அச்யுத சதகம் முதலான ஸ்தோத்திரங்களையும் மும்மணிக் கோவை, நவமணிமாலை) முதலான தமிழ்ப் பிரபந்தங்களையும் அருளிச் சென்றார் ஸ்ரீதேசிகன்!
ஒருமுறை, துறவி ஒருவர் தேசிகனிடம் வாதம் புரிய வந்தார். அவர் ஒரு மந்திரவாதியும்கூட. ஆனாலும் ஸ்ரீதேசிகனின் முன்னால் துறவியின் வாதம் எடுபடவில்லை; தோல்வி அடைந்தார். எனினும், தேசிகனை மந்திர சக்தியால் பழிவாங்கத் துடித்தார்! ஒரு குளத்துக்குள் தடக்கென்று இறங்கியவர், குளத்து நீர் முழுவதையும் குடித்தார். அதன் விளைவாக ஸ்ரீதேசிகனின் வயிறு பருக்கத்தொடங்கியது. இந்தச் சூழ்ச்சியை அறிந்த ஸ்ரீதேசிகன், கொஞ்சம்கூட கவலைப்படவில்லை. அருகில் இருந்த தூண் ஒன்றை நகத்தால் கீறினார். அவ்வளவுதான்... தூணில் இருந்து தண்ணீர் கொட்டத் தொடங்கியது. படிப்படியாக ஸ்ரீதேசிகனின் வயிறும் பழைய நிலைக்குத் திரும்பியது. அதைக் கண்ட மந்திரவாதி, நெடுஞ்சாண்கிடையாக விழுந்து ஸ்ரீதேசிகனை நமஸ்கரித்தார்.
கடலூர் மாவட்டம் திருவஹீந்திரபுரத்தில், அருள்மிகு தேவநாத ஸ்வாமி திருக்கோயில் எதிரில் உள்ள ஔஷதகிரியில் (மலையில்) ஸ்ரீஹயக்ரீவர் காட்சி தருகிறார். ஔஷதகிரி சிறிய குன்று என்றபோதிலும், மேலே பிரமாண்டமான கோயிலில் அருமையாக சேவை சாதிக்கிறார் ஸ்ரீஹயக்ரீவர்! தேவநாத சுவாமி கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.
செங்கல்பட்டு அருகில் செட்டிப் புண்ணியம்,
வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உள்ள லட்சுமி ஹயக்ரீவரை வணங்கலாம்.
ஹயக்ரீவர் மந்திரம் :
“ஞானானந்தமயம் தேவம் நிர்மல
ஸ்படிகாக்ருதிம் ஆதாரம்
ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே”
இம்மந்திரத்தை பெருமாளுக்குரிய புதன் மற்றும் சனிக்கிழமைகளில் வீட்டில் ஹயக்ரீவர் படமிருந்தால், அவர் படத்திற்கு முன்பு நெய் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, சாம்பிராணி கொளுத்தி, ஏதேனும் பழம் ஒன்றை நிவேதனமாக வைத்து இம்மந்திரத்தை 108 முறை முறை கூறி வழிபடலாம். மேலும் ஸ்ரீ ஹயக்ரீவர் சந்நிதி இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி, மலர்களை சூட்டி, சிறிது குதிரைக்கொள்ளை நிவேதனமாக வைத்து வழிபட, காலையில் இருந்து வரும் அணைத்து தடைகளும் விலகும். அதோடு நீண்ட காலமாக இருந்து வரும் நோய்களும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும் நீங்கும். மேலும் நமக்கு ஏற்பட்டிருக்கின்ற தீய சக்திகளின் பாதிப்பகளும் நீங்கும்.



No comments:
Post a Comment