ஹயக்ரீவர் குதிரை முகம் கொண்ட திருமாலின் வம்சம், அம்சம். ஆவணி மாத திருவோண நட்சத்திரம் ஹயக்ரீவர் ஜெயந்தி.
முரட்டு சுபாவம் இருக்கும் கால பைரவர் ஞானபாடம்
சொ ல்லித்தந்தார் சரஸ்வதிதேவி ,
அதே போல் முரட் டுத்தனமாக கோனேரிக்கரையில் முரட்டுத்தனமாக இருக்கும் ஹயக்ரீவருக்கு ஞானபா டம் சொல்லித்தந்தா ர் சரஸ்வதிதேவி .
சொ
அதே போல் முரட்
கலிபுருஷன் ஹயக்ரீவரின் இருப்பிடத்திற்கு வந்தான். முரட்டுத்தனமாக கலிபுருஷனைப் பார்த்தார் ஹயக்ரீவர்.
"என்ன விஷயம்? யார் நீ?" என அதிகாரமாகக் கேட்டார்.
"தங்களுடைய சிஷ்யன். என் பெயர் கலிபுருஷன். தர்மங்களை செய்துவரும் பலர், அதர்மங்களையும் இந்தக் கானகத்தில் செய்து வருகிறார்கள். அவர்களை தாங்கள் அடையாளம் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்பதற்காகத் தேடி வந்திருக்கிறேன்" என்றான் கலிபுருஷன் பவ்யமாக!
ஒரு நாழிகை யோசித்த ஹயக்ரீவர். "அது சரி, நீ எப்படி இங்கே நுழைந்தாய்? என்னைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?" என்றார் ஹயக்ரீவர்.
"இந்த கொனேரிக் கானகத்தின் அரசனாக தாங்கள் வீற்றிருக்கிறீர்கள். தங்களது துணிவு, தைரியம், பலம் ஆகியவற்றை இந்த பூலோகமே தினமும் கேட்டு வியந்து போகிறது. தாங்கள் என் கோரிக்கையை ஏற்று உதவுவீர்கள் என்று கஷ்டப் பட்டுத் தேடிச் சரண் அடைந்திருக்கிறேன்" என்று காலில் விழுந்தான்.
"என்ன வேண்டும் உனக்கு?"
"எனக்கு என்ன வேண்டும் என்பதல்ல ஹயக்ரீவரே! தங்களுக்குள்ள செல்வாக்கு புகழ், வீரம், தங்களுக்கு உரிமையான இடம், இந்த கானகம் எல்லாம், தங்களை விட்டுப் போய் விடக்கூடாது என்ற பயம். அதனால் தான் தங்களிடம், நேரிடையாக வந்தேன்" என்று ஹயக்ரீவர் மனதில் தனது விஷ எண்ணத்தைப் புகுத்தலானான் கலிபுருஷன்.
"என்ன சொல்கிறாய் நீ?" என்றார் ஹயக்ரீவர்.
"ஆமாம், பிரபு! தாங்கள் சுதந்திரமாகச் சுற்றி வந்த இந்த கானகத்தின் தெற்குப் பக்கம் கோனேரி நதி ஓடுகிறதல்லவா? அந்த நதிக்கரையில் புதியதாக "ஏழுமலை" ஒன்று தோன்றியிருக்கிறது. அதை, "ஆதிசேஷன்" என்று சொல்கிறார்கள். அங்கே, தேவர்களும், ரிஷிகளும், ஞானிகளும் இன்று கூடி, ஏதோ அவதாரம் நடந்து விட்டதாகப் பேசிக் கொள்கிறார்கள்!" என்றான்.
"அப்படியா?"
"அந்த இடமும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள இடம்தான். தங்களைக் கேட்காமல் ஓர் ஈ, எறும்பு கூட இந்தக் கானகத்தில் நுழைய முடியாது. அப்படி இருக்க, எப்படி தங்கள் அனுமதி இல்லாமல் "ஏழுமலை" வந்தது? இதை தடுக்க வேண்டாமா?" என்றான்.
"ஆதிசேஷன்தானே! வந்துவிட்டுப் போகட்டும்" என்றார் ஹயக்ரீவர்.
"இல்லை ஹயக்ரீவரே! இப்படியே விட்டு விட்டால், நாளைக்கு வானுலகத்திலிருந்து ஒவ்வொரு தேவரும் இந்த இயற்கைச் செழிப்பு மிக்க கோனேரிக் கானகத்தைப் பங்கு போட்டு விடுவார்கள். அதைத்தான் சொல்ல வந்தேன். அதுமட்டுமல்ல, ஹயக்ரீவரே! தாங்கள் வானுலகத்திலும் நிம்மதியாக இருக்கவில்லை. பூலோகத்திற்கு வந்தாலும் தங்களை நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள் போலிருக்கிறது. யோசித்து செயல்படுங்கள்" என்று மேலும் தூண்டிவிட்டான் கலிபுருஷன்.
இதைக் கேட்டு ஹயக்ரீவர் மெல்ல யோசிக்க ஆரம்பித்தார்.
நான்கு கால் பாய்ச்சலில், திருமலையே கலங்கும் அளவுக்கு புழுதியை கிளப்பியபடி, பூமி அதிர, மிருக, பறவை இனங்கள் உயிருக்கு பயந்து நாளா புறமும் சிதறி ஓட, ஹயக்ரீவர் குதிரை ரூபத்தில் அங்கு வந்து சேர்ந்தார். கண்களில் மிகுந்த கோபம். அவர் விடுகின்ற மூச்சே அனலாக கொதித்தது.
கோனேரிக் கரையில் ஏழுமலையை உருவாக்கி அதில் நிலையாக "உரு" கொண்டு தன்னந் தனியாக கல்வடிவில் "விஷ்ணு" சாந்த சொரூபமாக இருப்பதைக் கண்டு ஹயக்ரீவருக்கு எரிச்சல் ஏற்ப்பட்டது.
முன்னங்கால் இரண்டையும் உயரமாக தூக்கி கனைத்தார். இந்த கனைப்புச் சத்தம் கோனேரிக் கரையிலுள்ள அத்தனை சுற்று வட்டாரங்களிலும் பலத்த இடி சப்தம் போல் கேட்டது.
"யார் இங்கே என் அனுமதி இல்லாமல் குடியேறியது? நேர் எதிரில் வந்து நில்" என்று ஆக்ரோஷமாக கேட்டார்.
சில நிமிட மௌனத்திற்குப் பிறகு எந்த விதப் பதிலும் எங்கிருந்தும் வராததால் ஹயக்ரீவருக்கு மேலும் கோபம் உண்டாயிற்று.
"இன்னும் ஒரு நாழிகைக்குள் என் முன் வராது போனால், இந்த மலையே துவம்சம் ஆகிவிடும்" என்று பயமுறுத்தினார்.
இதை கேட்ட ஆதிசேஷனுக்கு அடிவயிறு எரிந்த்தது.
ஒரே மூச்சில் ஹயக்ரீவரை "கபளீகரம்" செய்து விடலாமா? என்று தோன்றிற்று.
திருமால், மொனமாக ஆதிசேஷனைப் பார்த்து "பொறுமையாக இரு" என்று கண்களால் அடக்கினார்.
..........
சித்தர் அகத்தியர் அருள்

No comments:
Post a Comment