Monday, July 20, 2020

சிவபெருமான் (4)


 அர்த்தநாரீஸ்வரர்

 இவர் ஆணும் அல்ல பெண்ணும் அல்ல. மனிதரில் தான் ஆணும் பெண்ணும் உண்டு. பூமிதனில் படைக்கப் பெற்ற மற்ற உயிரினத்திலும் ஆணும் பெண்ணும் உண்டு. இவையனைத்தும் இறைவனின் படைப்பு. இப்படி இருபிரிவுகள் உலகில் வாழும் உயிரினங்களுக்கு மட்டும் தான் தேவை. ஏனெனில் உலகின் சுழற்சி என்பது உயிர்கள் தோன்றுவதில் தான் உள்ளது. ஒவ்வொரு வகை உயிரினமும் தனது வம்சத்தை விருத்தி செய்ய இனப்பெருக்கம் செய்கின்றது. அவ்வாறு உயிரினம் உண்டாக ஆண், பெண் அமைப்புகள் உயிரினங்களில் வேண்டும். அவ்வாறு இனப்பெருக்க உறுப்புகளைத் தாங்கி நிற்க உயிரினங்கள் இருபாலாக படைக்கப்பட்டன. 

           இவை அனைத்திற்கும் மூலவரான இறைவன் இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். அவருக்கு கருப்பையில் பிள்ளை சுமந்து வம்சம் வளர்க்க வேண்டியது இல்லை. எனவே அவர் ஆண் என்றோ பெண் என்றோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே தான் அவர் எதற்கும் அப்பாற்பட்டவர் என்று கூறுகின்றோம்.

           அவனே ஆதியும் அந்தமும் அற்ற, உயர்வும் தாழ்வும், இகமும் பரமும் அற்ற இன்பத்திற்கும் துன்பத்திற்கும் அப்பாற்பட்ட ஆதிப்பரம்பொருள ஈசன் என்று அழைக்கப்படுகின்ற பரப்பிரம்மம்.

64 திருவிளையாடல்

                             சிவபெருமான் உலக உயிர்களிடம் அன்பு கொண்டு, அருள் செய்த கருணையை கதைகளாக விவரிக்கிறது ‘திருவிளையாடல் புராணம்’ என்ற நூல். இதனை இயற்றியவர் பரஞ்சோதி முனிவர் ஆவார். 
             
             திருவிளையாடல் புராணத்தில் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களும் தனித்தனிப் படலங்களாக விளக்கப்பட்டுள்ளன.

  1. இந்திரன் பழி தீர்த்த படலம்.
  2. வெள்ளையானை சாபம் தீர்த்த படலம்.
  3. திருநகரங்கண்ட படலம்.
  4. தடாதகைப் பிராட்டியார் திருவவதாரப் படலம்.
  5. தடாதகையாரின் திருமணப் படலம்.
  6. வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்.
  7. குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்.
  8. அன்னக் குழியும் வைகையையும் அழைத்த படலம்.
  9. ஏழுகடல் அழைத்த படலம்.
  10. மலயத்துவசனை அழைத்த படலம்.
  11. உக்கிரபாண்டியன் திருவவதாரப் படலம்.
  12. உக்கிர குமாரனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம்.
  13. கடல் சுவற வேல்விட்ட படலம்.
  14. இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம்.
  15. மேருவைச் செண்டாலடித்த படலம்.
  16. வேதத்துக்குப் பொருள்அருளிச் செய்த படலம்.
  17. மாணிக்கம் விற்ற படலம்.
  18. வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்.
  19. நான் மாடக்கூடலான படலம்.
  20. எல்லாம் வல்ல சித்தரான படலம்.
  21. கல் யானைக்கு கரும்பு தந்த படலம்.
  22. யானை எய்த படலம்.
  23. விருத்த குமார பாலரான படலம்.
  24. கால் மாறி ஆடிய படலம்.
  25. பழியஞ்சின படலம்.
  26. மாபாதகம் தீர்த்த படலம்.
  27. அங்கம் வெட்டின படலம்.
  28. நாகமேய்த படலம்.
  29. மாயப்பசுவை வதைத்த படலம்.
  30. மெய் காட்டிட்ட படலம்.
  31. உலவாக்கிழி அருளிய படலம்.
  32. வளையல் விற்ற படலம்.
  33. அட்டமாசித்தி உபதேசித்த படலம்.
  34. விடையிலச்சினை இட்ட படலம்.
  35. தண்ணீர்ப் பந்தல் வைத்த படலம்.
  36. இரசவாதம் செய்த படலம்.
  37. சோழனை மடுவில் வீட்டிய படலம்.
  38. உலவாக் கோட்டை அருளிய படலம்.
  39. மாமனாக வந்து வழக்குரைத்த படலம்.
  40. வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்.
  41. விறகு விற்ற படலம்.
  42. திருமுகம் கொடுத்த படலம்.
  43. பலகை இட்ட படலம்.
  44. இசைவாது வென்ற படலம்.
  45. பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம்.
  46. பன்றிக் குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம்.
  47. கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்.
  48. நாரைக்கு முத்தி கொடுத்த படலம்.
  49. திருவாலவாயான படலம்.
  50. சுந்தரப்பேரம் செய்த படலம்.
  51. சங்கப்பலகை கொடுத்த படலம்.
  52. தருமிக்குப் பொற்கிழியளித்த படலம்.
  53. கீரனைக் கரையேற்றிய படலம்.
  54. கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்.
  55. சங்கத்தார் கலகந்தீர்த்த படலம்.
  56. இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்.
  57. வலை வீசின படலம்.
  58. வாதவூர் அடிகளுக்கு உபதேசித்த படலம்.
  59. நரி பரியாக்கிய படலம்.
  60. பரி நரியாக்கிய படலம்.
  61. மண் சுமந்த படலம்.
  62. பாண்டியன் சுரம் தீர்த்த படலம்.
  63. சமணரைக் கழுவேற்றிய படலம்.
  64. வன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலம்.

                                           பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணம், கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றிய கந்தபுராணம். இதில் திருவிளையாடல் புராணம், சிவபெருமானின் இடதுகண் என்று போற்றப்படுகிறது.



No comments:

Post a Comment