Sunday, July 19, 2020

பைரவர் (4)



ஸ்ரீ கால பைரவரை எந்த கிழமைகளில், எந்த ராசியினர் வழிபடுதல் சிறப்பு


ஞாயிறு கிழமை:

                  சிம்ம ராசியினர் ஞாயிறு கிழமையில் வழிபடுவதால், தள்ளிப்போகும் திருமணம் கை கூடும். இந்த கிழமையில் சிம்ம ராசி ஆண், பெண்கள் பைரவருக்கு ராகு காலத்தில் அர்ச்சனை, ருத்ராட்ச அபிஷேகம், வடை மாலை சாற்றி வழிபட்டால், திருமண தடை நீங்கி விரைவில் நடைபெறும். 

திங்கள் கிழமை:

               கடக ராசியினர் திங்கட் கிழமை அல்லது சங்கடஹர சதுர்த்தி தினத்தில் பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து, சந்தன காப்பிட்டு, புனுகு பூசி, நந்தியாவட்டை மலர் மாலை அணிவித்து வழிபட்டு வந்தால், கண் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

செவ்வாய்க் கிழமை:


                  மேஷம் மற்றும் விருச்சிக ராசியினர் செவ்வாய்க் கிழமையில் பைரவரை வழிபடுவதால் சிறப்பான பலன்களை தரும். மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருள் திரும்ப பெறலாம்.

 புதன் கிழமை:

                     மிதுனம், கன்னி ராசியினர் புதன் கிழமைகளில் பைரவரை வழிபடுவதன் மூலம் நற்பலன்களைப் பெறலாம். நெய் தீபம் ஏற்றி வழிபடுவதால் பூமி லாபம் கிடைக்கும்.

வியாழக்கிழமை :


                         தனுசு, மீன ராசியினர் பைரவரை வழிபடுவதன் மூலம் சிறப்பான பலன்கள் கிடைக்கும். வியாழக்கிழமையில் விளக்கேற்றி வழிபட்டால் பில்லி சூனியம் விலகும்.

வெள்ளிக் கிழமை
                 
                 ரிஷபம், துலாம் ராசியினர் வழிபடுவதால் சிறப்பான பலன்களை தரும். வெள்ளிக் கிழமை மாலையில் வில்வ இலையாலும், வாசனை மலர்களாலும் சகசரநாம அர்ச்சனை செய்து வந்தால் வறுமை நீங்கி செல்வம் சேரும்.

சனி கிழமை:


           மகரம், கும்ப ராசியினர் சனிக்கிழமையன்று பைரவரை வழிபடுவதால் சிறப்பான பலன்களை தரும். சனி பகவானுக்கு பைரவர் தான் குரு. 


பைரவர் கோயில்கள் : 

  • குத்தாலம் – மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ள க்ஷத்திரபாலபுரம் எனும் ஊரில் கால பைரவருக்கு தனி கோயில் உள்ளது. சிவபெருமானை மூலவராக கொண்ட கோயில்களில் பைரவர் இருந்தாலும், தமிழ்நாட்டில் பைரவருக்கான தனிக் கோயில் இது ஒன்றேயாகும்.
  • நாகை மாவட்டத்தில் உள்ளது சீர்காழி ஊரில் சட்டைநாதரை தலைவராக் கொண்டு எட்டு பைரவர்களும் கோயில் கொண்டுள்ளனர்.
  • திருச்சி உறையூர் சாலையில் உள்ள ஜெயகாளிகாம்பாள் கோயிலில் அஷ்ட பைரவர்கள் பைரவிகள் மற்றும் வாகனங்களுடன் காட்சியளிக்கின்றனர்.
  • கோயம்புத்தூர் நஞசுண்டாபுரம் காயாந்தஸ்தானம் மயானம் அருகே எட்டடி உயர காலபைரவர் வீற்றிருக்கிறார்.
  • காஞ்சிபுரம் திருமாகறல் தலத்தில் அர்த்தநாரி பைரவர் வடிவில் காட்சியளிக்கின்றனர்.
  • விழுப்புரம் மாவட்டம்,சின்னசேலம் அருகில் ஆறகளுரில் அருள்மிகு பெரியநாயகி உடனுறை காமநாதீசுவரர் ஆலயத்தில் அஷ்ட பைரவர்கள் காட்சியளிக்கின்றனர்.
  • யாழ்ப்பாணத்தில் பொன்னலையில் அருள்மிகு நரசிங்கபைரவர் வடிவில் காட்சியளிக்கின்றனர்.

                தஞ்சைமாவட்டம்,திருவிடைமருதூர் வட்டம்கதிராமங்களம் நருவெளி மிக அருகில் காவரி நதி வடக்கு நோக்கி ஓடி வடகாவேரி என சிறப்பு பெயர்பெற்ற காவிரியின் மேற்குக்கரையில் வினாயகர் கோவிலும்,காசிவிஸ்வநாதர்கோவிலும்,இவ்விருகோவிலுக்கும் இடையே மிக பழமையான இரட்டைகால பைரவர் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள காலபைரவரையும்,வினாயகரையும் வழிபட திருமணதடை நீங்கி வரைவில்திருமணம் நடை பெறும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை. 

பைரவ காயத்ரி

”ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே 
ஸ்வாந வாஹாய தீமஹி 
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்”

"ஓம் திகம்பராய வித்மஹே 
தீர்கதிஷணாய தீமஹி 
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்"

ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் காயத்ரி:

ஓம் பைரவாய வித்மஹே
ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி: 
தந்நோஹ் ஸ்வர்ணாகர்ஷணபைரவ ப்ரசோதயாத்!

ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் மூல மந்திரம்:

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் ஆபதுத்தாரணாய
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் அஜாமளபந்ததாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய,மம தாரித்ரிய வித்வேஷனாய
மஹா பைரவாய நமஹ,ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்!



No comments:

Post a Comment