சைவத் திருமுறைகள்
பன்னிரு திருமுறைகள் பல சிவபக்தர்களால் (நாயன்மார்கள்) இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும்.
- முதல் திருமுறை - சம்பந்தர்
- இரண்டாம் திருமுறை - சம்பந்தர்
- மூன்றாம் திருமுறை - சம்பந்தர்
- நான்காம் திருமுறை - அப்பர்
- ஐந்தாம் திருமுறை - அப்பர்
- ஆறாம் திருமுறை - அப்பர்
- ஏழாம் திருமுறை - சுந்தரர்
- எட்டாம் திருமுறை - திருவாசகம், மாணிக்கவாசகர்
- ஒன்பதாம் திருமுறை - ஒன்பதின்மர் அருளியது
- பத்தாம் திருமுறை - திருமூலர் அருளிய திருமந்தி
ரம் - பதினொன்றாம் திருமுறை - சிவனடியார் இருபத்தேழ்வர் அருளியது
- பன்னிரண்டாம் திருமுறை - சேக்கிழார் அருளிய பெரியபுரா
ணம்

சிவ தலங்கள் :
எண்ணிக்கை அடிப்படையில்:
பஞ்சபூதத் தலங்கள், பஞ்ச கேதார தலங்கள், பஞ்ச தாண்டவ தலங்கள், பஞ்ச குரோச தலங்கள், ஆறு ஆதார தலங்கள், சப்த விடங்க தலங்கள்,சப்த கரை சிவ தலங்கள்,சப்த கைலாய தலங்கள், அட்டவீரட்டானத் தலங்கள், நவலிங்கபுரம், நவ கைலாயங்கள்,
சைவ அடியார்களால் பாடல் பெற்றதைக் கொண்டு:
தேவாரத் திருத்தலங்கள், திருவாசகத் திருத்தலங்கள், தேவார வைப்புத் தலங்கள், திருச்சிற்றம்பலக் கோவையார் திருத்தலங்கள், திருவிசைப்பாத் திருத்தலங்கள் எனவும், வன விசேச தலங்கள், முக்தி தரவல்ல சிவத்தலங்கள், சோதிர்லிங்க தலங்கள்.
இவற்றில் தேவாரம் பாடல் பெற்ற தலமானது:
காவிரி தென்கரைத் தலங்கள், காவிரி வடகரைத் தலங்கள், பாண்டிய நாட்டு தலங்கள், கொங்கு நாட்டுத் தலங்கள், நடுநாட்டுத் தலங்கள், தொண்டை நாட்டு தலங்கள்.

சைவ உலகில் திருநாவுக்கரசரும், திரு ஞானசம்பந்தரும், சுந்தர மூர்த்தி சுவாமிகளும், மாணிக்கவாசகரும் நால்வர் எனப்படுவர். இவர்களை சைவசமயக் குரவர்கள் என்றும் அழைப்பர். சந்தான குரவர் என்போர் இவரிலும் வேறுபட்ட, மெய்யியல் சான்றோர்.
வீர சைவருக்கு பசவர் முதலான சரணரும் , காஷ்மீரிகளுக்கு அபிநவகுப்தர், வசுகுப்தர் முதலானோரும், சிரௌத்தருக்கு அப்பைய தீட்சிதர், ஸ்ரீகண்டர், அரதத் தர் ஆகியோரும், நாத சைவருக்கு கோரக்கர் முதலானோரும் முக்கியமான சைவப்பெரியோர்.
சிவமே முதல் எனக் கருதிச் செய்யப்படும் அனைத்தும் சிவ புண்ணியமாகும், மேலும் 1. கடவுளை வழிபடல், 2. தாய், தந்தை, ஆசான் இவர்களைப் பேணுதல், 3. உயிர்க்கு இரங்குதல், 4. உண்மை பேசுதல், 5. செய்நன்றி அறிதல் போன்றனவும் புண்ணியத்தில் சேர்க்கப்படுகின்றன. இவ்வாறு புண்ணியங்களை செய்தவர்கள் சிவ இன்பத்தையும், சீவ ( உயிர் ) புண்ணியங்களைச் செய்தவர் சுவர்க்க இன்பத்தையும் அனுபவிப்பர் என்று சைவர்கள் நம்புகிறார்கள்.
சைவ அடியாளர்கள் உடலில் திருநீறு அணிய வேண்டும். சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு முன்னே உறக்கம் நீங்கி எழ வேண்டும். திருநீறு அணிந்து சிவபெருமானை நினைந்து திருப்பள்ளி எழுச்சி முதலிய திருமுறைப் பாடல்களை ஓத வேண்டும். தூய நீர் கொண்டு அனுட்டானம் செய்து திருவைந்தெழுத்தை எண்ணித் திருமறைகள், திருமுறைகள் ஓத வேண்டும்.

No comments:
Post a Comment