சிவபெருமானது ஐந்து குமாரர்கள் பைரவர், கணபதி, முரு கன், வீரபத்திரர், ஐயனார் ஆவர். பாற்கடலைக் கடைந்தபோது, திருமால் மோகினி அவதாரம் எடுத்துச் சிவபெருமானுடன் கூடிப் பெற்ற ஐயனாரே இன்று, ஐயப்பன் என்று அறியப்படுகிறார்.
கயிலையில் பார்வதி தேவி மானசீகமாக ஒரு குழந்தையைத் தோற்றுவித்தார், சிவபெருமானை அறியாத அக்குழந்தை அவருடன் சண்டையிட்டு தலையிழந்தாது, பார்வதி தேவியின் வேண்டுகோளை ஏற்று யானைமுகம் பொருத்தி அம்மகனை மீள்வித்தார்.
சூரன் என்ற அரக்கனை அழிக்கச் சிவபெருமான் தனது ஆறுமுகங்களிலுள்ள நெற்றிக் கண்களிலிருந்து நெருப்புபொறியை உருவாக்கியதாகவும், அந்த ஆறு நெருப்பு பொறிகளையும் வாயு பகவான் சரவணப்பொய்கை எனும் ஆற்றில் விட்டார் . அந்த நெருப்பு பொறிகள் ஆறு குழந்தைகளாக மாறி, அவற்றைக் கார்த்திகைப் பெண்டீர் வளர்த்து வந்ததார்கள். ஆறு குழந்தைகளையும் அன்னையாகிய பார்வதி அரவணைத்த பொழுது ஆறுமுகங்களைக் கொண்ட முருகனாக அக்குழந்தை மாறியது.
தருகா வனத்து முனிவர்களின் ஆணவத்தினை அழிக்கச் சிவபெருமான் திகம்பர மூர்த்தியாகச் சென்றார். அவருடைய அழகில் முனிவர்களின் மனைவிகள் மயங்க, கோபம் கொண்ட முனிவர்கள் தங்களுடைய யாகவலிமையால் புலியை உருவாக்கி அனுப்பினர், சிவபெருமான் அதன் தோலை உரித்து உடுத்திக் கொண்டார். அடுத்து யானையை அனுப்ப, அதன் தோலினை ஈசன் போர்த்தார். மழுவினை எய்தனர், அதனைத் தன்னுடைய ஆயுதங்களில் ஒன்றாகச் சிவபெருமான் இணைத்துக் கொண்டார். அவை எதுவும் தனக்கு ஒன்றும் செய்யாது வாளாநிற்க, அவர் தாருகாவனத்து இருடிகளைத் தோற்கடித்ததாக, அக்கதை சொல்கின்றது.
தட்சனின் சாபத்திலிருந்து சந்தி ரனைக் காக்க, அவனைத் தலையில் சூடிக்கொண்டதும், காசிபர் கத்ரு தம்பதிகளின் குழந்தைகளான பாம்புகள், மாற்றந்தாய் மகனான கருடனிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள சிவபெருமானை சரணடைந்த போது, அவற்றை அவர் ஆபரணங்களாகத் தரித்துக் கொண்டதும், பாற்கடலைக்கடையும் பொழுது வாசுகி பாம்பு கக்கிய ஆலகாலத்தினை உண்டு அதன் மூலம் நீலகண்டர் ஆனதும், அவர் பெருங்கருணைக்குச் சான்றுகளாகும்.
நடராச உருவத்தில் ஐந்தொழில்.
- ஒரு வலக்கையிலுள்ள உடுக்கை படைக்கும் ஆற்றலைக் குறிக்கும் (கீழிருக்
கும் தாமரையும் பிறப்பிற்கு வழிவகுக்கும்) - ஒரு இடக்கையிலுள்ள நெருப்பு அழிக்கும் ஆற்றலைக் குறிக்கும்
- இன்னொரு வலக்கையின் உட்புறத்தை காட்டுவது அருளும் ஆற்றலைக் குறிக்கும்
- இன்னொரு இடக்கை துதிக்கை போல் உட்புறத்தினை மறைத்தவாறு இருப்பது மறைக்கும் ஆற்றலைக் குறிக்கும்
- தூக்கிய பாதமும் ஆணவத்தை மிதித்தாடும் இன்னொரு பாதமும் மனமாயை உட்பட தீய சக்திகளிலிருந்து காக்கும் ஆற்றலைக் குறிக்கும்.
சிவபெருமான் வடிவங்கள்:
சிவபெருமான் அருவம், அருவுருவம், உருவம் என மூன்று வடிவங்களில் உள்ளார்.
அருவத்திருமேனி சத்தர் என்றும், அருவுருவத்திருமேனி பரம்பொருள் என்றும், உருவத்திருமேனி பிரவிருத்தர் என்றும் அழைக்கப்படுகிறது.
அருவுருவமாக இலிங்கமும், மகேசுவரமூர்த்தங்கள் மற்றும் சிவஉருவத்திருமேனிகள் ஆகியவை உருவத்திருமேனியாகவும் சைவர்களால் வழிபடப்படுகின்றன.
தடத்தநிலையில் ஈசன் கொள்ளும், அறுபத்து நான்கு வடிவங்கள் ஆகமங்களில் விளக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிறப்பான இருபத்து ஐந்து சிவமூர்த்தங்கள் மகேசுவர மூர்த்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
விரதங்களை இருந்து வழிபாடு செய்து பரிபூரண அருள்பெற இயலும்:
1. சோமவார விரதம் - திங்கள்கிழமைகளில் இருப்பது
2. உமா மகேஸ்வர விரதம் - கார்த்திகை பவுர்ணமியில் இரு ப்பது
3. திருவாதிரை விரதம் - மார்கழி மாதத்தில் வருவது
4. சிவராத்திரி விரதம் - மாசி மாதம் அமாவாசை தினத்தி ல் வருவது
5. கல்யாண விரதம் - பங்குனி உத்திரத்தன்று கடைபிடிப்பது
6. பாசுபத விரதம் - தைப்பூச தினத்தில் வருவது
7. அஷ்டமி விரதம் - வைகாசி மாதத்தில பூர்வபட்ச அஷ்டமி தினம்
8. கேதாரகௌரி விரதம் - ஐப்பசி அமாவாசையை தீபாவளி தி னத்தில் இருக்கும் விரதம்.


No comments:
Post a Comment